அறிவியல் பார்வையில் “நேரம்”

நீளம், அகலம், உயரம், என்ற சொற்கள், ஒரு பொருளை, அளக்கப் பயன்படும் ஒருவகைக் கருவிகள் ஆகும். அதேபோல், “நேரம்” என்பதும், காலத்தை அளப்பதற்குப் பயன்படும் ஒரு, கருவியே. நேரம் என்பது, மனிதர்களாலே உருவாக்கப்பட்டது. பாபிலோனியர்கள், ஒரு மணி நேரத்தை 60 நிமிடம் என்றும், ஒரு நிமிடத்தை 60 நொடிகள் என்றும், நடைமுறைப்படுத்தினர்.

ஆனால், இந்த நேரம், பிரபஞ்சம் முழுவதும் ஒரே மாதிரியாக இருக்குமா?. நேரம் எங்கிருந்து தொடங்கியது ? நேரம் என்பது, முன்னோக்கி மட்டுமே சென்றுகொண்டு இருக்கிறது. அப்படி என்றால் , காலப்பயணம் (time travel) என்பது சாத்தியம்தானா? ஒரு பொருளின் வேகத்திற்கும், நேரத்திற்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா? என்பது போன்ற , வித்தியாசமான சில கேள்விகளுக்கான, பதில்களை இங்கே காண்போம்.

நேரத்தின் தொடக்கம்

நாம் அனைவரும், பெருவெடிப்பைப் பற்றி கண்டிப்பாகக் கேள்விப்பட்டு இருப்போம். இன்று, நாம் பார்க்கும் வான்பொருட்கள் அனைத்தும், 1300 கோடி வருடங்களுக்கு முன்பு ஒரே புள்ளியில் அடைக்கப்பட்டு இருந்தன. அப்போது நிகழ்ந்த, பெருவெடிப்பினால் உருவானவையே, இப்போது நாம் பார்க்கும் அனைத்தும். அந்த, பெருவெடிப்பு தான், நேரத்தின் தொடக்கம் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

பெருவெடிப்பிற்கு முன்பு, பிரபஞ்சத்தில், எந்த ஒரு பொருளும் இயக்கத்தில் இல்லை. எனவே, அப்போதெல்லாம் நேரம் என்ற ஒன்றே இல்லை. இதனால், பெருவெடிப்பு தான் நேரத்தின் தொடக்கம் என்ற முடிவுக்கு வரலாம்.

பிரபஞ்சத்தில் நேரம் நிலையானதா?

நியூட்டன் அவர்கள், பிரபஞ்சத்தில், நேரம் என்பது, எல்லா இடங்களிலும் ஒரே மாதிரியாகவே இருக்கும் என்று கருதினார். ஆனால், அறிவியலில், அவர் செய்த பல்வேறு தவறுகளைத் திருத்திய ஐன்ஸ்டீன், “நேரம் என்பது, பிரபஞ்சத்தில், நிலையான ஒன்று அல்ல” என்று நிரூபித்தார் .
அவரைப் பொறுத்தவரையில், நேரம் என்பது, வேகம், தொலைவு, மற்றும் ஈர்ப்பு விசை ஆகியவற்றைப் பொருத்து மாறுகிறது.

தொலைவு

பூமியிலிருந்து, சுமார் 7 கோடி ஒளியாண்டுகள் தொலைவில் உயிரினங்கள் வாழும் ஒரு கிரகம் இருப்பதாக, நினைத்துக்கொள்ளுங்கள். ஒருவேளை, அவர்களால், தொலைநோக்கியின் உதவியோடு நம் பூமியைப் பார்க்க முடிந்தால், 7 கோடி வருடங்களுக்கு முன்பு டைனோசர்கள் வாழ்ந்த அந்த பூமியையே, அவர்களால் பார்க்க முடியும். ஏனெனில், டைனோசர்கள் வாழ்ந்த காலத்தில் பூமியிலிருந்து, புறப்பட்ட ஒளிதான், அவர்களை அடைந்துள்ளது.

அதேபோல், 7கோடி வருடங்களுக்கு முன்பு இருந்த அந்த கிரகத்தைத் தான் நம்மாலும் பார்க்க முடியும். எனவே, நேரம் என்பது, தொலைவைப் பொருத்து மாறுகிறது.

எனவே, தொலைவையும், நேரத்தையும் இணைத்து, “வெளி நேரப்-போர்வை” (Spacetime fabric) என்ற கருத்தை முன்வைத்தார் ஐன்ஸ்டீன். அதாவது, நேரத்தையும், தொலைவையும், இணைத்து, ஒரு போர்வையாக எடுத்துக்கொண்டார்.

ஈர்ப்பு விசை (gravity)

விண்வெளியில் உள்ள பொருள்கள், எந்த அளவு, அந்தப் போர்வையை, உள்நோக்கி வளைக்கின்றதோ, அந்த அளவு அவற்றின் நேரம் மாறுபடுகிறது. அந்தப் போர்வையானது, கிரகங்களின் (அல்லது) நட்சத்திரங்களின் (அல்லது) கருந்துளைகளின், ஈர்ப்பு விசையினால்தான் வளைக்கப்படுகிறது. இவ்வாறாக, ஈர்ப்பு விசையும் நேரத்தோடு தொடர்புபடுத்தப்படுகிறது.

வேகம்

மிதம் இருப்பது, “வேகம்”. நமது பூமி, அந்த நேரப் போர்வையைத் தனது ஈர்ப்பு விசையினால் சிறிதளவு வளைத்துள்ளது. ஆனால் அதிவேக இயக்கத்தில் இருக்கும் பொருள்கள் மீது, ஈர்ப்பு விசை செயல்படுவது இல்லை. எனவே, அவை நேரப் போர்வையை வளைப்பதில்லை. இதனால், அந்தப் பொருளின் நேரம், பூமியின் நேரத்திலிருந்து வேறுபடுகிறது.

கண்டிப்பாகப் பலருக்கு இது புரிந்திருக்க வாய்ப்பில்லை.

ஒரு உதாரணத்தைப் பார்த்து விடுவோம்.

உதாரணமாக, நாம் இப்போது ஒளியின் வேகத்தில் விண்வெளியில், பயணித்துவிட்டு, ஒரு வருடம் கழித்து பூமிக்குத் திரும்புவதாக எடுத்துக்கொள்ளுங்கள். அப்படி நாம் வரும்போது, பூமியில் 5-10 வருடங்கள், முடிந்திருக்கும். ஏனென்றால், நாம் நேரப்போர்வையை வளைக்காமல் சென்றுள்ளோம்.

ஈக்கள், மற்றும் தேனீக்களுக்கு, நாம் மிகவும் மெதுவாக இயங்குவது போல் தோன்றும். ஏனென்றால், அவை வேகமாக இயங்குகின்றன. அதேபோல், நாம் ஒளியின் வேகத்தில் சென்றால், எந்தப் பொருளும் இயங்காமல் இருப்பது போலவே நமக்குத் தெரியும்.

காலப்பயணம் சாத்தியமா?

“ஒளியின் வேகத்தில் பயணம் செய்தால், காலப்பயணம் சாத்தியமே” என்று, ஐன்ஸ்டீன் கூறியுள்ளார். முன்பே கூறப்பட்டிருப்பதுபோல், ஒளியின் வேகத்தில் நாம் பயணித்தால், ஒரு வருடம் பயணித்துவிட்டு, பூமியை அடையும் போது, இங்கே 5-10 வருடங்கள் முடிந்திருக்கும். இங்கு நாம், எதிர்காலத்தை நோக்கிப் பயணம் செய்துள்ளோம் அல்லவா?

ஆனால், இறந்தகாலப் பயணம்?

நேரம் என்பது, எப்போதும் முன்நோக்கியே, சென்றுகொண்டிருக்கிறது. அதனைப் பொறுத்தே ‘எண்ட்ரோபி’ எனப்படும், சிதைவு வீதமும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. நேரம், எப்போதும் பின்நோக்கிச் செல்லப்போவதும் இல்லை, சிதைந்த ஒரு பொருளானது, மீண்டும் பழைய நிலையை அடையப்போவதும் இல்லை. எனவே, இறந்தகாலப் பயணம், சாத்தியமற்றது.

என்று, இந்தக்கால அறிவியல் கூறுகிறது. ஆனால், எதிர்காலத்தில் இது மாறலாம்.

காலப்பயணத்தின் விளைவு

இப்போது, நீங்கள் “பொன்னியின் செல்வன்” புத்தகம் படிக்கிறீர்கள். உங்களுக்கு, மிகவும் பிடித்துவிட்டது. அதனை, எழுதிய, கல்கியைப் பார்க்க வேண்டும் என்கிற ஆசையில், Time machine -ஐ உருவாக்கி, புத்தகம் எழுதுவதற்கு முன்பு இருந்த, கல்கியைப் பார்க்கச் செல்கிறீர்கள். அங்கு இருக்கும் கல்கி அவர்கள், உங்களிடம் இருந்த பொன்னியின் செல்லன் புத்தகத்தைப் படிக்கிறார். அவருக்கு அது, பிடித்துப்போக, அவர், அதே புத்தகத்தை எழுதி, தான் எழுதியது போல் வெளியிடுகிறார். இப்போது, நிஜத்தில், அந்தப் புத்தகத்தை எழுதியது யார்?.

காலப் பயணத்தால் இதுபோன்ற, பல சிக்கல்கள், உருவாகின்றன. இதே முறையில், பல குற்றங்களும் நிகழ வாய்ப்புள்ளன.