கருந்துளையின் மர்மங்கள்

கருந்துளை

இது பற்றி கண்டுபிடிக்கப்படும் . ஒவ்வொரு பதில்களும், புதிதாக, பல கேள்விகளை உருவாக்குகின்றன. Spacetime fabric எனப்படும், வெளி -நேரப் போர்வையை, இந்த, பிரபஞ்சத்தில் உள்ள அனைத்துப் பொருள்களும் வளைத்துள்ளன. ஆனால், கருந்துளை, அதனை வளைக்கிறதா, அல்லது, அதில், துளை ஏற்படுத்துகிறதா? என்பதே பெரும் சந்தேகமாக உள்ளது.

(நேரப்போர்வை (spacetime fabric) பற்றி தெரிந்துகொள்ள

“ஒளி” பற்றிய ஆர்வமூட்டும் தகவல்கள்)

கருந்துளையின் உள்ளே, நீங்கள், ஒரு வினாடி இருந்துவிட்டு வந்தால், நீங்கள், வெளியே வரும் போது, இந்தப் பிரபஞ்சத்தின் முடிவைப் பார்ப்பீர்கள். ஏனென்றால், அதனுள், நேரம் என்பது, மிகவும் மெதுவாக, இயங்குகிறது. அங்கே, ஒரு வினாடி என்பது, பிரபஞ்சம், தோன்றி மறைவதற்கான, ஒட்டுமொத்த காலத்தையும் குறிக்கிறது.

கருந்துளை என்றால் என்ன?

விண்வெளியில், நம் சூரியனைப் போலவே, பல நட்சத்திரங்கள் உள்ளன. இது அனைவருக்கும் தெரிந்ததே. அந்த நட்சத்திரங்களின், வாழ்நாளின் இறுதியில், அவற்றின், கன அளவு அதிகரிக்கப்பட்டு, ஒரு கட்டத்தில், வெடித்துவிடுகின்றன. பிறகு, ஒளியை உருவாக்கும் திறனையும் இழந்துவிடுகின்றன. அடுத்தபடியாக, அவற்றின் ஈர்ப்பு விசையும், நிறையும், முன்பு இருந்ததை விட, பல மடங்கு அதிகரித்து விடுகின்றன. இவ்வாறு, கடைசியில், உருவாக்கப்படும் ஒரு அமைப்பே, black hole எனப்படும் “கருந்துளை” ஆகும்.

இங்கே, இயற்பியல் விதிகள் முமுமையாக மீறப்படுகின்றன. உதாரணமாக, “ஒளிக்கு, நிறை அல்ல”. என்பது, நம்மில், பலருக்குத் தெரியும். ஆனால், நிறை இல்லாத, அந்த ஒளியின் மீது கூட கருந்துளையின் ஈர்ப்பு விசை செயல்படுகிறது.

கருந்துளையின் அமைப்பு

கருந்துளையைப் பொறுத்தவரை, அதன் “Event horizon” எனப்படும், பரப்பு – எல்லையைத், தாண்டி உள்ளே செல்லும் பொருள்களை மட்டுமே அது ஈர்க்கும். அந்த, பரப்பு- எல்லையைத் தாண்டி, வெளியே உள்ள, பொருள்கள், கருந்துளையைச் சுற்றி வரத் தொடங்கும்.

உண்மையில், கருந்துளையின் அமைப்பானது, சனி கிரகத்தைப் போல, வளைய அமைப்பையே, பெற்றுள்ளது. ஆனால், கருந்துளையின் புகைப்படத்தில், அவ்வளைய அமைப்பு, அதனைச் சுற்றிலும் அமைந்துள்ளது, அதற்கு, செங்குத்து திசையில் மற்றொரு வளையமும் அமைந்துள்ளது.

இதற்குக் காரணம், “கருந்துளை, ஒளியை வளைக்கிறது”. இதனால், நமக்கு, இரு வளையங்கள் செங்குத்து திசைகளில் இருப்பதுபோல, தெரிகின்றன.

கருந்துளையின் உள்ளே

விஞ்ஞானிகள், கருந்துளையின் உள்ளே, “Singularity” எனப்படும், ஒருமைத்தன்மை, இருப்பதாக, கணிதத்தின் உதவியோடு, நிரூபித்துள்ளனர். பொதுவாக, ஒருமைத்தன்மை எனப்படுவது, கணிதத்தில், “முடிவற்ற” என்ற செல்லைக் குறிக்கிறது. இந்த, பிரபஞ்சம், விரிவடைந்துகொண்டே, இருப்பதால், அது, முடிவற்றதாக இருக்கிறது. என்று சொல்கிறோம் அல்லவா?.

அதே போல், ஒரு பொருள், சுருங்கிக்கொண்டே இருந்தாலும், அது முடிவற்றதுதானே? அதே கதைதான், கருந்துளையின் உள்ளேயும் நடக்கிறது. கருந்துளை, அதன் நிறையை, இழந்துகொண்டே இருக்கிறது. அதன் உள்ளே இருக்கும், பொருள், நிலையானதாக இருப்பதில்லை.

இவ்வாறு, ஒரு ஊகம் இருக்க, மற்றொருபுறம், “கருந்துளையானது, இந்தப் பிரபஞ்சத்தை, இன்னொரு பிரபஞ்சத்துடன் இணைக்கும் பாலமாகச் செயல்படுகிறது” என்ற ஊகங்களும், நிலவி வருகின்றன. இதுவும், கணிதத்தால், நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆனால், மற்றொரு பிரபஞ்சம் என்பதை, பலர், நம்பத் தயாராக இல்லை.

கருந்துளையின் முடிவு

வேதியியலில், ஒருசில தனிமங்கள், radiation, எனப்படும், கதிர்வீச்சுகளை, வெளிப்படுத்துவதாகக் கேள்விப்பட்டிருப்போம். அவ்வாறு, ஒரு பொருள், கதிர்விச்சினை வெளிப்படுத்தினால், அதன் நிறை, குறைகிறது.

கருந்துளையிலிருந்தும், ஒருசில, கதிர்வீச்சுகள், வெளியேற்றப்படுவதை, ஸ்டீஃபன் ஹாக்கிங் எனும் இயற்பியலாளர் கண்டுபிடித்தார். மேலும், “இதனால், அதன், நிறை, குறைந்து கொண்டே வருகிறது” எனும் முடிவுக்கு வந்தார்.

எனவே கருந்துளை, அதன் முடிவில், தனது, மொத்த நிறையையும் இழக்கும் என்பது, உறுதியாகிறது. ஆனால், அதன் பிறகு, அதற்கு என்ன ஆகும் என்பதெல்லாம், இதுவரை, கண்டுபிடிக்கப்படவில்லை.

நமது பால்வெளி அண்டத்தில் இருக்கும், கருந்துளை, அதன் நிறையை முழுவதுமாக இழக்க, பல, ட்ரில்லியன் வருடங்களுக்கு மேல் ஆகலாம் என்று, கூறப்படுகிறது.