பிரபஞ்சத்தின் “தொடக்கம்” மற்றும் “முடிவு”

பிரபஞ்சத்தின் தொடக்கம் மற்றும் “முடிவு”

இந்தப் பிரபஞ்சமானது நமது கற்பனைக்கு அப்பாற்பட்ட, பல்வேறு, தகவல்களைத் தன்னுள் பொதித்து வைத்துள்ளது. நேரம் என்பதே இல்லாத இடங்களும் பிரபஞ்சத்தில் உள்ளன. கருந்துளை (black hole) எனப்படும் கோட்பாடானது இன்னும் ஒரு மர்மமாகவே உள்ளது. கருந்துளை வழியே ஈர்க்கப்படும் பொருள்கள் அனைத்தும், வெள்ளைத் துளை (white hole) வழியே வெளியேற்றப்படலாம் என விஞ்ஞானிகள் கணிதத்தின் உதவியோடு கணித்துள்ளனர்.

இவ்வாறு, பல்வேறு, வியக்கத்தக்க பொருள்களைத் தன்னுள் வைத்திருக்கும், இந்த பிரபஞ்சத்தின் தொடக்கம் மற்றும் முடிவு குறித்து, இங்கு விரிவாகக் காண்போம்.

பிரபஞ்சத்தின் தொடக்கம்

சுமார் 13,787 கோடி ஆண்டுகளுக்கு முன்பாக, இப்போது நாம் பார்க்கும் வான்பொருள்கள் அனைத்தும், ஒரே புள்ளியில் அடங்கி இருந்தன. அப்போதைய பிரபஞ்சத்தின் அளவானது, ஒரு, அணுவைவிட சிறியதாக இருந்தது. ஆச்சரியமாக உள்ளதல்லவா?.நம்மால் நினைத்துக் கூட பார்க்க முடியாத, அதிக அளவிலான வெப்பம் மற்றும் அழுத்தத்தால் நிகழ்ந்த, பெருவெடிப்பு (Big bang) எனும் நிகழ்வின் மூலமாகவே, இப்போதுள்ள, அனைத்து வான் பொருட்களும் உருவாகின. அப்போது தொடங்கிய வெடிப்பின் காரணமாக, இன்றுவரையில், இந்த பிரபஞ்சம், விரிவடைந்துகொண்டேதான் இருக்கிறது.

இந்தப் பிரபஞ்சத்தின் கனஅளவு (Volume) வளர வளர, அதன், விரிவடையும் வேகம், குறைகிறது என்று, விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். கடந்த 600 கோடி வருடங்களிலிருந்துதான், பிரபஞ்சத்தின் விரிவடையும் வேகம், குறைந்துள்ளது.

பெருவெடிப்பின் காரணமாக உருவாகிய, ஒருசில வாயுக்களின், கலப்பு (அல்லது) சுழற்சியினால் உருவானவையே, Galarxies எனப்படும் விண்மீன் மண்டலங்கள் ஆகும். பெரும்பாலான, அதிக நிறை கொண்ட விண்மீன் மண்டலங்கள், அவற்றின் மையப்பகுதியில், ஒரு கருந்துளையைக் (black hole) கொண்டுள்ளன. கருந்துளை, நேரத்தை வளைக்கும் தன்மை கொண்டது. அது இன்று வரையில், ஒரு மர்மமாகவே உள்ளது. அதுபற்றி, இனிவரும் காலங்களில் காண்போம்.

பிரபஞ்சத்தின் “முடிவு”:

பல அறிவியல் ஆய்வாளர்கள்; “பிரபஞ்சத்தின் விரிவடையும் வேகம், குறையவில்லை, மாறாக, அதிகரித்துக்கொண்டேதான் இருக்கிறது”, என்றே கூறுகின்றனர் . இதற்குக் காரணம், இருள் ஆற்றல் (Dark energy) எனப்படும் ஒருவகை ஆற்றலே என்றும் கூறுகின்றனர். இதுவரை, ஒளி, செல்லாத, பிரபஞ்சத்தின் இடங்களில் உள்ள ஆற்றலே இருள் ஆற்றல் என்றும் முடிவு செய்துள்ளனர். இருள் ஆற்றல் என்பது ஒரு ஊகமே. அது இன்னும் நிரூபிக்கப்படவில்லை.

பிரபஞ்சத்தின் தொடக்கத்திற்குக் காரணமும் இருள் ஆற்றலே, என்ற ஊகங்களும் உள்ளன.

பிரபஞ்சத்தின் முடிவு குறித்து, பல்வேறு ஊகங்கள் நிலவி வருகின்றன. இன்றுவரை, பிரபஞ்சத்தில் உள்ள அனைத்துப் பொருள்களும், இயங்கிக்கொண்டேதான் இருக்கின்றன. அந்த இயக்கம் நிற்குமா? என்பது கேள்விக்குறியே. ஆனால், பிரபஞ்சத்தில், ஒளி என்பதே இல்லாமல் போக வாய்ப்புண்டு. 10,000 கோடி வருடங்களுக்குப் பிறகு, விண்மீன்களின் (Stars) உருவாக்கம் நிறுத்தப்பட்டு இருக்கும். மேலும், பிரபஞ்சத்தில் உள்ள விண்மீன்கள் அனைத்தும் அழியத்தொடங்கும் . பிறகு, ஒட்டுமொத்த பிரபஞ்சமும் கருந்துளைகளால் நிரப்பப்பட்டு இருக்கும். ஒளி, மற்றும் வெப்பம் என்பதே இல்லாமல் போகும். இதனால்,மொத்த பிரபஞ்சமும், உறைந்துபோக வாய்ப்புண்டு, என்பது ஒரு ஊகமாக உள்ளது.

(அல்லது)

இப்போது விரிவடைந்துகொண்டு இருக்கும் மொத்த பிரபஞ்சமும், அதன் விரிவடையும் வேகம் குறைக்கப்பட்டு, மீண்டும், மையப்பகுதியை நோக்கி ஈர்க்கப்பட்டு, பெருவெடிப்பிற்கு முன்பிருந்த நிலையையே, மீண்டும் அடையும், என்பது மற்றொரு ஊகமாக உள்ளது. ஆனால், பிரபஞ்சத்தின் வேகம், குறையவில்லை, அதிகரித்துக்கொண்டுதான் இருக்கிறது என்றே, விஞ்ஞானிகள் கூறுகின்றனர். ஆகவே, இரண்டாவது ஊகம் சாத்தியமற்றதாக உள்ளது. இனி வரும் காலங்களில், பிரபஞ்சத்தின் விரிவடையும் வேகம், குறையத் தொடங்கலாம்…..

இதுவே “THE BIG CRUNCH THEORY” என்று கூறப்படுகிறது.

ஆனால் பிரபஞ்சம், அதன் இறுதியில், உறைந்துவிடும் என்ற, முதல் ஊகமே, பலராலும், ஏற்றுக்கொள்ளப்பட்டதாக உள்ளது.