Bachelor of Laws (LLB) Honours Degree

Nov 20, 202611 views
Posted
November 20, 2026

இலங்கை திறந்த பல்கலைக்கழகம்
The Open University of Sri Lanka
LLB – சட்டமாணி சிறப்பு பட்டப்படிப்பு
2025/2026 – Extended

அனுமதித் தகைமைகள்

  • க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் மூன்று (03) பாடங்களிலும் ஒரே அமர்வில் ஏதேனும் ஒரு பிரிவை சார்ந்த பாடங்களில் சித்தி (புதிய பாடத்திட்டத்தின் கீழ் 3 பாடங்கள்), அல்லது,
  • க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் ஒரே பிரிவை சார்ந்த நான்கு (04) பாடங்களிலும் (பழைய பாடத்திட்டத்தின் கீழ் 4 பாடங்கள்) அவற்றில் 3 பாடங்களிற்கான சித்தியை ஒரே அமர்வில் பெற்றிருத்தல், அல்லது,
  • இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் ஏதேனும் நிகழ்ச்சித் திட்டத்தின் SLQF மட்டம் 2 இல் முப்பது (30) அல்லது அதற்கு மேற்பட்ட பாடக்கற்றல் அளவெண்களைக் கொண்டிருத்தல், அல்லது,
  • திறந்த பல்கலைக்கழகத்தின் செனட் சபையினால் ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய இதற்கு சமமான அல்லது மேலான தகுதிகளைக் கொண்டிருத்தல்,

அத்துடன்

  • அனுமதி நோக்கத்திற்காக நடாத்தப்படும் தெரிவுப் பரீட்சையில் சித்தியடைதல்.
  • இலங்கை உயர் நீதிமன்றத்தின் சட்டத்தரணிகள் நிகழ்ச்சித்திட்டத்தின் மட்டம் 4 இற்கு நேரடியாக உட்பிரவேசிக்கலாம் என்பதுடன் அவர்கள் மட்டம் 3 இல் இருந்து விலக்களிக்கப்படுவர்.

தேர்வுப் பரீட்சை
நாடு முழுவதும் உள்ள ஒன்பது பிராந்திய மையங்களில்.
தேர்வுப் பரீட்சை 08 பிப்ரவரி 2026 இல் நடைபெறும்.

-நாடு முழுவதும் உள்ள ஒன்பது பிராந்திய மையங்களில்.

ஒதுக்கப்பட்டுள்ள இருக்கைகள்

கொழும்பு200
கண்டி120
மாத்தறை75
அனுராதபுரம்75
யாழ்ப்பாணம்75
மட்டக்களப்பு75
பதுளை40
குருநாகல்45
இரத்தினபுரி45

விண்ணப்ப விபரங்கள்

  • விண்ணப்ப கட்டணம்: ரூபாய் 7,000/=
  • விண்ணப்ப அனுமதிக்காலம்: 20/11/2025
  • விண்ணப்ப முடிவுத்திகதி: 31/12/2025
  • கற்கை மொழி: சிங்களம் / தமிழ் / ஆங்கிலம்
  • விண்ணப்பப்படிவ கட்டணம் வரவட்டை/கடனட்டை இணையத்தினூடாக செலுத்தப்படுதல் வேண்டும்.
  • திறந்த பல்கலைக்கழகத்தின் பிராந்திய நிலையங்களில் மற்றும் ஏனைய கற்றல் நிலையங்களில் நேரடியாகத் தங்களது கட்டணத்தை செலுத்த முடியும்.
  • கட்டணம் செலுத்திய விண்ணப்பதாரிகளிற்கு அனுமதிப்பத்திரத்தை தரவிறக்கம் செய்வதற்கான இணைப்பை குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் இரண்டின் மூலம் தகவல் தொழினுட்ப உதவி நிலையம் அனுப்பும். தேர்வுக்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு சேர்க்கைப் படிவங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
  • விண்ணப்பிக்கும் இணையதளம்

Apply Online Only

Prospectus & Application Guide

Course Details

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *