Government Job – Web Writer (அரசு வேலைவாய்ப்பு – இணையத்தள எழுத்தாளர்)
அரசு வேலைவாய்ப்பு – இணையத்தள எழுத்தாளர் (Web Writer) ![]()
Application Form Download Link – விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்குவதற்கான இணைப்பு
Link to View Job Description – வேலை விபரணத்தைப் பார்வையிடுவதற்காக இணைப்பு
அரசாங்க தகவல் திணைக்களத்தில் காலியாக உள்ள இணையத்தள எழுத்தாளர் – MN 02-2025 பதவிக்கு இலங்கைப் பிரஜைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
பதவி
இணையத்தள எழுத்தாளர் (Web Writer)
மொத்த வெற்றிடங்கள்: 06
• சிங்களம் – 01
• தமிழ் – 02
• ஆங்கிலம் – 03
சம்பளம்
ரூ. 48,470 முதல் ரூ. 82,800 வரை
2027 ஜனவரி 01 முதல் குறித்த சம்பளத் திட்டத்திற்கு தகுதியுடையவர்கள் ஆவர்.
கல்வித் தகைமை
வயது 18 முதல் 30 வரை இருக்க வேண்டும்.
G.C.E. O/L பரீட்சையில் ஒரே அமர்வில் 6 பாடங்களில் சித்தி மற்றும் மொழி, கணிதம் உள்ளிட்ட பாடங்களில் தேவையான தகைமைகள் பெற்றிருக்க வேண்டும்.
தொழில் தகைமை
கீழ்கண்டவற்றில் ஏதேனும் ஒன்று:
தகவல் தொழில்நுட்பத்தில் டிப்ளோமா / அதற்கு இணையான தகைமை
அல்லது
UGC அங்கீகரித்த நிறுவனத்தில் பெற்ற வெகுஜன ஊடகத் தொடர்பான டிப்ளோமா / தகைமை.
தேர்வு முறை
எழுத்துப் பரீட்சை + நேர்முகப் பரீட்சை
எழுத்துப் பரீட்சையில்:
சமூக ஊடகம் மற்றும் இதழியல் – 100 மதிப்பெண்கள்
நேரம்: 1 மணி
மொழித்திறன் மற்றும் இதழியல் – 100 மதிப்பெண்கள்
நேரம்: 2½ மணி
சித்தியடைய தேவையான குறைந்தபட்ச மதிப்பெண்: 40.
விண்ணப்பிக்கும் இறுதித் திகதி
24 ஆகஸ்ட் 2026
கீழே உள்ள லிங்கை அழுத்தி வேலை விபரணத்தை பார்வையிடவும்
https://drive.google.com/…/1C3Qlhuoq4rk-CamNKf…/view…
Application Form Download
https://drive.google.com/…/1hBi2EgnSfNxYWhW9Wc4…/view…
விண்ணப்பத்தை தேவையான கல்வி மற்றும் தொழில் தகைமைச் சான்றிதழ்களின் பிரதிகளுடன்,
பணிப்பாளர் நாயகம், அரசாங்க தகவல் திணைக்களம்,
163, கிருலப்பன அவென்யூ, கொழும்பு 05
என்ற முகவரிக்கு பதிவுத் தபால் மூலம் அனுப்ப வேண்டும்.
பரீட்சைக் கட்டணம்: ரூ. 1,000/-
அரசாங்க தகவல் திணைக்களத்தில் வேலை செய்ய விரும்புவோருக்கு இந்த வாய்ப்பை தவறவிடாதீர்கள்!
இந்த தகவலை வேலை தேடும் நண்பர்களுக்கும் Share செய்யுங்கள்!