Grade 10 Science Flashcard Questions and Answers
தரம்: 10
பாடம்: விஞ்ஞானம்
பாட அலகு: 1 (உயிரின இரசாயன அடிப்படை)
வினா: உயிரினங்களின் உடலில் அதிக அளவில் காணப்படும் இரசாயன மூலகம் யாது?
விடை: ஒட்சிசன்(O) – 65%.
வினா: அங்கிகளின் உடலில் ஒட்சிசனுக்கு அடுத்ததாக அதிகளவில் காணப்படும் இரசாயன மூலகம் யாது?
விடை: காபன் (C) – 18%.
வினா: அங்கிகளின் உடலில் ஐதரசன் எத்தனை சதவீதம் உள்ளது?
விடை: 10%.
வினா: அங்கிகளின் உடலில் காணப்படும் நைதரசனின் சதவீதம் எத்தனை?
விடை: 3%.
வினா: கல்சியம் உயிரினங்களின் உடலில் எத்தனை சதவீதம் உள்ளது?
விடை: 1.5%.
வினா: அங்கிகளின் உடலில் பொசுபரசு எத்தனை சதவீதம் உள்ளது?
விடை: 1.0%.
வினா: அங்கிகளின் உடலில் காணப்படும் பொற்றாசியத்தின் அளவு எவ்வளவு?
விடை: 0.35%.
வினா: புரதம் அங்கிகளின் உடலில் எத்தனை சதவீதம் உள்ளது?
விடை: 0.25%.
வினா: அங்கிகளின் உடலில் சோடியம் எத்தனை சதவீதம் உள்ளது?
விடை: 0.15%.
வினா: மக்னீசியம் உயிரினங்களின் உடலில் எத்தனை சதவீதம் உள்ளது?
விடை: 0.05%.
வினா: இரும்பு உயிரினங்களின் உடலில் எவ்வளவு சதவீதம் உள்ளது?
விடை: நுண்ணியளவில்.
வினா: ஐயோடின் உயிரினங்களின் உடலில் எவ்வளவு சதவீதம் உள்ளது?
விடை: நுண்ணியளவில்.
வினா: அங்கிகளுக்கு அத்தியாவசியமான இரசாயன மூலகங்களின் மொத்த எண்ணிக்கை யாது?
விடை: 25.
வினா: இயற்கையில் காணப்படும் இரசாயன மூலகங்களின் எண்ணிக்கை யாது?
விடை: 92
வினா: காபோவைதரேற்றில் காணப்படும் இரசாயன மூலகங்கள் யாவை?
விடை: காபன், ஐதரசன், ஒட்சிசன்
வினா: காபோவைதரேற்றின் மூலக்கூற்றுச் சூத்திரம் யாது?
விடை: Cx (H2 O) y
வினா: ஒரு சக்கரைட்டு (Monosaccharide) இற்கு உதாரணங்கள் தருக?
விடை: குளுக்கோசு, பிறக்கோசு, கலக்றோசு
வினா: இரு சக்கரைட்டு (Disaccharide) இற்கு உதாரணங்கள் தருக?
விடை: மோல்ற்றோசு, சுக்குரோசு, இலக்றோசு
வினா: பல்சக்கரைட்டு (Disaccharide) இற்கு உதாரணங்கள் தருக?
விடை: மோல்ற்றோசு, சுக்குரோசு, இலக்றோசு
வினா: ஒரு சக்கரைட்டுகளை விளக்குக?
விடை: நீரில் கரையும் தன்மையுடைய பளிங்குரு அமைப்பைக் கொண்ட ஒரு சக்கரைட்டுகள் பொதுவாக எளிய வெல்லங்கள் என அழைக்கப்படுகின்றன, இனிப்பு சுவை கொண்ட இவை காபோவைதரேற்றின் கட்டமைப்பலகு ஆகும்.
வினா: இரு சக்கரைட்டுகளை விளக்குக?
விடை: இரண்டு ஒரு சக்கரைட்டுக்கள் ஒன்றிணைவதனால் ஏற்படும் நீர் மூலக்கூற்று வெளியேற்றத்தின் மூலம் இரு சக்கரைட்டுக்கள் உருவாகின்றன.
இவை இனிப்பு சுவையுடைய பளிங்குரு அமைப்புடையதும் நீரில் கரையக்கூடியதுமாகும். இதனடிப்படையில் இவை நீரேற்றம் செய்யப்படுவதன் மூலம் ஒரு சக்கரைட்டுக்கள் பெறப்படும்.
வினா: பல் சக்கரைட்டுகளை விளக்குக?
விடை: ஒரு சக்கரைட்டு மூலக்கூறுகள் பல்பகுதியமாக்கப்படுவதன் ஊடாக அதாவது பல ஒரு சக்கரைட்டுக்கள் சேர்ந்து பல் சக்கரைட்டுக்கள் பெறப்படுகிறது.
இதனடிப்படையில் இவை நீர்பகுப்படைவதன் ஊடாக ஒரு சக்கரைட்டுக்களை உருவாக்கும். நீரில் கறையாதவை, பளிங்குரு அற்றவை. கிளை கொண்ட அல்லது கிளையற்ற சங்கிலி அமைப்பில் காணப்படும்.
உதாரணம்: செலுலோசு, மாப்பொருள், கிளைகோஜன், இவற்றின் கட்டமைப்பலகு குளுக்கோசு ஆகும். இவற்றின் ஒன்றிலிருந்து ஒன்று வேறுபட்ட இயல்புகளைத் தீர்மானிப்பது இவற்றில் காணப்படும் குளுக்கோசு மூலக்கூறுகளின் எண்ணிக்கை, மூலக்கூறுகள் தொடர்புபட்டுள்ள முறை என்பவையாகும்.
வினா: குளுக்கோஸின் முக்கிய செயல்பாடு என்ன?
விடை: அங்கிகளின் உடலில் காணப்படும் அனைத்து செல்களும் இயங்குவதற்குத் தேவையான உடனடி ஆற்றலை வழங்குவது.
வினா: செல்லுலோஸ் எங்கு காணப்படுகிறது?
விடை: தாவர செல் சுவர்களில்.
வினா: புரதங்கள் எதனால் ஆனவை?
விடை: அமினோ அமிலங்களால்.
வினா: அமினோ அமிலங்களில் எத்தனை உள்ளன?
விடை: 20 – பொதுவான மரபணு குறியீட்டில் இருந்து குறிமுறை செய்யப்படுகின்றன. (மொத்தமாக 22 நிறுவப்பட்ட புரோட்டீனோஜெனிக் அமினோ அமிலங்கள் உள்ளன. அவற்றில் உடலில் புரதங்களை உருவாக்க 21 அமினோ அமிலங்கள் பொதுவானவை)
வினா: மனித உடலில் மிகவும் அத்தியாவசியமான அமினோ அமிலங்கள் எத்தனை உள்ளன?
விடை: 9 (நாம் தினசரி உண்ணும் உணவுகளிலிருந்தே இவை பெறப்படுகின்றன ஏனென்றால் இவற்றை நமது உடலால் உருவாக்க முடியாது. இவை நமது உடலில் தசை வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் பல முக்கிய செயற்பாடுகளை மேற்கொள்ள அவசியமாகும்.)
வினா: புரதங்களின் முதன்மை செயல்பாடு என்ன?
விடை: உடல் வளர்ச்சி, பழுது பார்த்தல், மற்றும் உடல் முழுவதும் புதிய திசுக்களை உருவாக்குதல்
வினா: லிப்பிடுகளின் முதன்மை செயல்பாடு என்ன?
விடை: ஆற்றல் சேமிப்பு மற்றும் பாதுகாப்பு.
வினா: நியூக்ளிக் அமிலங்களின் முக்கிய உறுப்பு யாது?
விடை: DNA மற்றும் RNA.
வினா: DNA-இன் முதன்மை செயல்பாடு என்ன?
விடை: மரபணு தகவல் சேமித்தல்.