💼 Job Vacancy

SLTB Job Vacancy இலங்கை போக்குவரத்து சபை

🏢 SLTB
📍 Location
All Island
⏰ Job Type
Full Time
📅 Application Deadline
7 September 2026
🚀 Apply Now
⏳ Deadline: 7 September 2026
⚠️
Application Deadline
Last date to apply: 7 September 2026. Don't miss this opportunity!

SLTB Job Vacancy இலங்கை போக்குவரத்து சபை

Application Form Download Link – விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்குவதற்கான இணைப்பு

இலங்கை போக்குவரத்து சபை (SLTB), நாடளாவிய ரீதியில் உள்ள அதன் சாலைகளில் ஒப்பந்த அடிப்படையில் சாரதிகள் மற்றும் நடத்துநர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்காக 1,037 வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்களை கோரியுள்ளது.

இதன்படி, 788 சாரதி வெற்றிடங்களும், 249 நடத்துநர் வெற்றிடங்களும் நிரப்பப்படவுள்ளன. அந்தந்த பிரதேசங்களில் இருந்து ஆட்சேர்ப்பு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

📌

 சாரதி பதவிக்கான தகுதிகள்

🔴

 சாரதி பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 21 முதல் 45 வயதுக்குள் இருக்க வேண்டும்.

🔴

 க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் 6 பாடங்களில் சித்தியடைந்திருப்பதுடன், இரண்டு பாடங்களில் திறமைச் சித்தி பெற்றிருக்க வேண்டும்.

🔴

 3 ஆண்டுகளுக்கும் மேலாக செல்லுபடியாகும் கனரக வாகன சாரதி அனுமதிப்பத்திரம் வைத்திருக்க வேண்டும்.

🔴

 குறிப்பிட்ட உடல் மற்றும் சுகாதாரத் தகுதிகளையும் விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்திருக்க வேண்டும்.

📌

 நடத்துநர் பதவிக்கான தகுதிகள்

🔴

 நடத்துநர் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 18 முதல் 45 வயதுக்குள் இருக்க வேண்டும்.

🔴

 க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் கணிதம் மற்றும் தாய்மொழி உள்ளிட்ட 6 பாடங்களில் சித்தியடைந்திருப்பதுடன், இரண்டு பாடங்களில் திறமைச் சித்தி (Credit Pass) பெற்றிருக்க வேண்டும்.

📌

 சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள்

தேர்வு செய்யப்படும் சாரதிகளுக்கு மாதாந்தம் 40,847 ரூபாய் அடிப்படை ஒப்பந்தக் கொடுப்பனவும், நடத்துநர்களுக்கு 40,008 ரூபாய் அடிப்படை ஒப்பந்தக் கொடுப்பனவும் வழங்கப்படும்.

இதனுடன் 17,800 ரூபாய் வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவு, மேலதிக நேரக் கொடுப்பனவு மற்றும் ஊக்கத்தொகைகளும் வழங்கப்படும்.

ஊழியர்கள் தமது சம்பளத்தில் இருந்து 8 சதவீதத்தை ஊழியர் சேமலாப நிதிக்கு (EPF) பங்களிக்க வேண்டும். அதேவேளை, தொழில் வழங்குநர் 12 சதவீதத்தை EPF-க்கு பங்களிப்பார்.

மேலும், தொழில் வழங்குநர் 3 சதவீதத்தை ஊழியர் நம்பிக்கை நிதிக்கு (ETF) பங்களிப்பார்.

ஆட்சேர்ப்பு நேர்முகத் தேர்வு, நடைமுறைப் பரீட்சை மற்றும் தொடர்புடைய பயிற்சி கற்கைநெறிகளின் பெறுபேறுகள் ஆகியவற்றின் அடிப்படையில் இடம்பெறும்.

நியமனம் செய்யப்பட்ட பின்னர் பணியிட மாற்றம் எதுவும் வழங்கப்படமாட்டாது என இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

வெற்றிகரமாகத் தெரிவு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு, அவர்கள் பணிபுரியும் இடத்திலிருந்து 30 கிலோமீற்றர் சுற்றளவுக்குள் பணியிடத்திற்குச் சென்று வருவதற்கான பயண அனுமதிப்பத்திரங்களும் வழங்கப்படும்.

📌

 விண்ணப்பிக்கும் முறை

குறிப்பிட்ட மாதிரிக்கு அமைய தயாரிக்கப்பட்ட விண்ணப்பங்களை பதிவுத் தபால் மூலம் பின்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்

பிரதம நிறைவேற்று அதிகாரி,
இலங்கை போக்குவரத்து சபை,
இல. 200, கிருல வீதி,
நாரஹேன்பிட்டி, கொழும்பு 05.

விண்ணப்பங்கள் 2026 செப்டெம்பர் 7ஆம் திகதிக்குள் கிடைக்குமாறு அனுப்பப்பட வேண்டும்.

விண்ணப்பிக்கும் “பதவி மற்றும் மாவட்டம்” ஆகியவை கடித உறையின் மேல் இடது மூலையில் தெளிவாகக் குறிப்பிடப்பட வேண்டும்.

நேர்முகத் தேர்வின்போது விண்ணப்பதாரர்கள் தங்களது பாடசாலை விலகல் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.

முழுமையற்ற விண்ணப்பங்கள் அல்லது குறிப்பிடப்பட்ட மாதிரிக்கு அமைவாக இல்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

🚀 Apply for This Job
Posted on August 20, 2026

🏷️ Job Tags

Government Full Time Sri Lanka